புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-25 20:03 GMT

`அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் எதிரே தமிழ்நாடு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அன்பு கண்டன உரையாற்றினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணை செயலாளர் ஆனந்த், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் இப்ராகிம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா, மாநில செயற்குழு உறுப்பினர் சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கண்டித்தும், அக்னிபத் திட்டத்தை கண்டித்தும் இசையுடன், கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்