விழுப்புரத்தில்சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-02-14 18:45 GMT


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட அமைப்பாளர் சங்கீதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகவரித்துறை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் கோவிந்தராஜிலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி பிரமோட்டர் அல்லாத ஏழை, எளிய மக்கள், மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழக அரசின் இருமொழி கொள்கைக்கு எதிரான 3-வது மொழி தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சார்பதிவாளர் சங்க நிர்வாகிகள் சத்யப்பிரியா, சக்திபிரகாஷ், வேல்முருகன், சடகோபன், அய்யனார், புண்ணியமூர்த்தி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மண்டல அமைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்