திருவாரூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-06 13:58 GMT

திருவாரூர்:

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2019-ம் ஆண்டுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.

கோஷங்கள்

அதன்படி திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சிவபாதம் முன்னிலை வகித்தார்.

இதில் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், மாநில செயலாளர் சந்திரபோஸ், மாநில அரசு உதவிபெறும் பள்ளி செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் பால்சாமி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Tags:    

மேலும் செய்திகள்