பேய்க்குளத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேய்க்குளத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-22 18:45 GMT

தட்டார்மடம்:

பேய்க்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைவீதி பகுதியில் மழை நீர் தேங்காமல் சாலையை சீரமைக்க வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கிடவும், சாத்தான்குளம், பேய்க்குளம் வழியாக சென்னைக்கு அரசு விரைவு பஸ் இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் சேசுமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாத்துரை, பாலகிருஷ்ணன், பாலசுந்தரகணபதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், சிவபெருமாள், முருகன், நெல்சன், பாக்கிய லட்சுமி, மரிய ஏசுவடியான் ஆகியோர் பேசினர். கிளை செயலாளர்கள் சுயம்பு, வீராப்பழம், பால்கண்ணன், கவுரி, மாடக்கண், தனபால், காளிமுத்து, கிருஷ்ணன், ஆ.கிருஷ்ணன், சுப்பையா, அந்தோணிமுத்து, ஞானசவுந்திரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்