கோவில்பட்டியில்கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில்கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-09-18 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டியில் போலீசாரை தாக்கியதாக பா.ஜனதா, இந்து முன்னணியினரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் வக்கீல் பெஞ்சமின் பிராங்கிளின், நகர காங்கிரஸ் தலைவர் அருண் பாண்டியன், பகத்சிங் ரத்த தான கழக அறக்கட்டளை தலைவர் காளிதாஸ், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை, பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனிராஜ், நாம் தமிழர் கட்சி மகாராஜா, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் தாவீதுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்