விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீர்நிலை புறம்போக்கு குடியிருப்பு வீடுகளை இடித்து வெளியேற்றுவதை தமிழக அரசு கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்ட சம்பள பாக்கியை உடன் வழங்கிட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும். திருவாரூர் புதிய, பழைய பஸ் நிலைய பழுதடைந்த சாலையை சீரமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் புலிகேசி, நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.