டாஸ்மாக் தொ மு ச வினர் ஆர்ப்பாட்டம்

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து டாஸ்மாக் தொ மு ச வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-30 17:10 GMT

விழுப்புரம்

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் துணை செயலாளர் திருமலை, ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மோடி அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்த காரணத்திற்காக தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகத்துடன் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரை இடைநீக்கம் செய்து நாடாளுமன்றத்தின் ஜனநாயக மரபுகளை மீறி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருவதை கண்டித்தும், மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய அனுமதி வழங்கக்கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சஸ்பெண்டு உத்தரவை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்