தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-08 18:46 GMT

விராலிமலை சோதனை சாவடியில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விராலிமலை கிளை செயலாளர் ராமராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் ராசா ரகுநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் வட மாநிலத்தவர்களின் வருகையை கண்டித்தும், திருப்பூர், சூளகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் தமிழர்களை தாக்கிய வட மாநிலத்தவர்களை கண்டறிந்து கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் அதிகம் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் உள்நுழைவு சீட்டை நடைமுறைபடுத்த வேண்டும். தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியாக மண்ணின் மைந்தர்களுக்கே 75 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்