தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-06-26 13:42 GMT

குடியாத்தம்

குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் தாலுகாக்களை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணாம்பட்டு தாலுகா கமிட்டி பொறுப்பாளர் சி.எம்.நடராஜன், குடியாத்தம் தாலுகா செயலாளர் எம்.கோபால், கே.வி.குப்பம் பொறுப்பாளர் கோபாலராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாநில செயலாளர் துளசிநாராயணன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், பீடி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த எஸ்.சிலம்பரசன், செஞ்சி ஊராட்சிமன்ற தலைவர் மல்லிகாராஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கோட்டீஸ்வரன், தாலுகா தலைவர் தசரதன், பொருளாளர் ரகுபதி உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மோர்தானா அணையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும், பள்ளி நேரத்தில் பரவக்கல் கிராமத்திற்கு பஸ் விட வேண்டும், வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும்,

பத்திரப்பள்ளி அணைக்கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும், செஞ்சியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும், தட்டப்பாறை, மோர்தானா பகுதியில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும்,

குடியாத்தம் பகுதியில் மாட்டுச்சந்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்