திருவெண்ணெய்நல்லூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-06-17 18:45 GMT


விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டார பொறியாளர் பெரோஸ்கான் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், ஊழியர்களின் விரோத போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட தலைவர் கேசவலு, மாவட்ட துணை தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்