ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-03-14 18:45 GMT


கள்ளக்குறிச்சி, 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி, மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 1.3.2022-ந் தேதி வெளியிட வேண்டிய தேர்ந்தோர் பட்டியலை உடனடியாக வெளியிட்டு பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்பு வழங்குவதாக ஒப்புக்கொண்ட உதவி பொறியாளர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணையை வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி, துணைத்தலைவர் தயாபாரம், மகளிர் அணி நிர்வாகிகள் பார்வதி, விஜயலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவி, சத்துணவு சங்க மாவட்ட தலைவர் வேலு மற்றும் நிர்வாகிகள் குமரன், கண்ணையன், வீரபத்திரன் உற்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சட்டை பையில் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்