ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வெளிப்பாளையம்:
நாகையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜம்ரூத்நிஷா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பணி நெருக்கடிகள், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்ஆப் தகவல்கள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்
ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் நலன் கருதி 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவண்சேரல், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் ஜோதிமணி நன்றி கூறினார்.