விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-23 17:26 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கேசவலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வலியுறுத்துவது, வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொளி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில தணிக்கையாளர் சரவணன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பொருளாளர் ரத்தினம் உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்