ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-23 19:30 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சங்கர், நிர்வாகிகள் இளங்குமரன், சர்வோத்தமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்