ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-07 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளை தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் என்ஜினீயர் செல்வகுமார் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கலந்து கொண்டஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், அவரை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டரின் ஆய்வு கூட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் விபத்தில் உயிரிழந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகிலன், பாரதி ஆகியோரின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தினர். முடிவில் உதவியாளர் கருப்பையா நன்றி கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்