ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-16 18:45 GMT

தொண்டி,

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், மங்கலக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது ஊராட்சி செயலாளர் பழனிகுமாரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க மாநில செயலாளர் பொறியாளர் செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் இணைச்செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்