ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-31 18:35 GMT

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறையினர் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். உதவி இயக்குனர், இணை இயக்குனர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். கணினி இயக்குபவர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்