வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-09 17:49 GMT

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணைத் தலைவர் திருக்குமரேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்