ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-09-13 18:45 GMT


நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ரேஷன் கடை பணியாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் மண்டல இணைப்பதிவாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். பணியாளர்கள் விரோத போக்கை கடைபிடிப்பது, பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பது மற்றும் சிக்கல் கூட்டுறவு கடன் சங்க செயல் அலுவலர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இரண்டு பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்