பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-31 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தகுதியான நபர்கள் இருந்தும் சுகாதார ஆய்வாளர் நிலை 1 பதவி உயர்வில் ஏற்படுத்தப்படும் வீண் காலதாமதத்தை உடனடியாக தவிர்க்க வேண்டும், 2014-க்கு பின் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகேந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர்கள் கோபிநாத், விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மக்களை தேடி மருத்துவ ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்