மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-24 19:45 GMT

இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை தாங்கினார். செயலாளர் தேவி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராணி சிறப்புரையாற்றினார்.

இதில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டிப்பது. மேலும் மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்