மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-17 19:45 GMT

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்