மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்திமாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்திமாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-16 22:19 GMT

ஆரல்வாய்மொழி:

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்திடவும், அங்கு உண்மை நிலவரத்தை கண்டறிய சென்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (என்.எப்.ஐ.டபிள்யூ.) தலைவர் அனிராஜா மீது தேச துரோக வழக்குபதிவு செய்த மணிப்பூர் அரசை கண்டித்தும் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி குமரி மாவட்டமாதர் இந்திய சம்மேளனம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார். ஹேமலதா, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராணி தொடக்க உரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் அனில்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் மேசியதாஸ், ஆரல் நகர செயலாளர் அருள்குமார், தோவாளை தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாதர் சங்க மாவட்ட துணைசெயலாளர் சோபனா முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பட்டத்தில் மணிப்பூர் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

---

Tags:    

மேலும் செய்திகள்