ஆபரண தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆபரண தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை தனியார் நகைக்கடை உரிமையாளர் ராஜசேகர் என்பவரை திருச்சி கே.கே. நகர் போலீசார் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்ததால் ரெயில் முன் விழுந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டித்து மணமேல்குடி ஒன்றிய ஆபரண தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி கே.கே. நகர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.