இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி மொழியை திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினர். பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருணைக்கடல் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், மாணவர்கள் மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை பாதுகாக்க கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.