கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாணை 56-ஐ உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக மானிக்குழு பரிந்துரையின்படி நிர்ணயித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். உதவி பேராசிரியருக்கான மாநில தகுதி தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் என்றும், வருகிற திங்கட்கிழமை முதல் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.