உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-21 13:28 GMT

ஊட்டி, ஜூன்

7-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர்கள் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தொரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி துப்புரவு, குடிநீர் தொழிலாளர் குறை தீர்ப்பு ஆணையம் அமைக்க வேண்டும். பணியின் போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். உள்ளாட்சித் துறையில் ஓய்வு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்