துறையூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

துறையூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-18 18:45 GMT

துறையூர் அண்ணா பஸ் நிலையம் அருகே இந்துக்களை அவமதித்து பேசியதாக கூறி ஆ.ராசாவை கண்டித்து துறையூர் நகர இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். துறையூர் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜசிம்மன், ஒம் பிரகாஷ், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். இதில் இந்துமுன்னணி, பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்