அரசு மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டாய பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரிஅரசு மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தளுனர்கள் திருப்பத்தூர் மாவட்ட துணை சுகாதார நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அமைப்புச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.
கட்டாய பணியை மாறுதல்கள் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், விருப்ப மாறுதல்கள் கலந்தாய்வுக்கான அரசாணை 131-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.
இயக்குனர் அலுவலகம் ஒரு குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களை மட்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள். கண்டன் ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் சுதாகரன் நன்றி கூறினர்.