அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-06 21:26 GMT

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சேரந்தைய ராஜா, அனைத்து மருந்தாளுனர் சங்கத்தை சேர்ந்த பாஸ்கர், மகளிர் அணி சிந்து உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்