அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி வழங்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் அரசு ஊழியர் சங்க பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார்.