அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸ் படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் திருமாலை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தமிழரசன் கலந்து கொண்டு பேசினார். இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.