அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-26 18:45 GMT


நாகை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புள்ளியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பிரசார செயலாளர் ரூஸ்வெல்ட் அற்புதராஜ் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். தொழிற்பயிற்சி அலுவலர் சங்க கிளை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் வளர்மாலா தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்