அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-27 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மதிய இடைவெளியின் போது தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் அன்புச்செல்வன், தாலுகா செயலாளர் திருமலை, ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க தாலுகா அமைப்பாளர் கணேசன், கிராம நிர்வாக முன்னேற்ற சங்க தாலுகா தலைவர் கருப்பசாமி, சத்துணவு ஊழியர் சங்க பொருளாளர் வள்ளியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் யூனியன் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மதிய இடைவேளையின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்