அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-09-22 18:33 GMT

சிக்கல்:

நாகை மாவட்டம் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணி நியமனம், முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், மாநிலத் தலைவர் சிவக்குமார், மாநில செயலாளர் மகேந்திரன், ஊராட்சி களப் பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி, நியாயவிலை கடை பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஜெயசந்திரராஜா, பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், அரசு பணியாளர் சங்கம், அரசு பணியாளர் நியாய விலை கடை சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்