9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 12:30 GMT

கே.வி.குப்பம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகம் எதிரில், வருவாய்த்துறையினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட கிளைத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். தனி தாசில்தார் ரமேஷ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அ.கீதா, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்குதல், அரசாணை 152 ஐ ரத்து செய்தல், சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கவேண்டும், காலமுறை ஊதியத்தில் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தறங்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசுதுறை மென்பொருள் திட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரிலம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பா.வேலு தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர்கள் எம்.பெருமாள், சி.மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது, முடிவில் சத்துணவு ஒன்றிய தலைவர் உமாராணி நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்