அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கேசவராமானுஜம் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டனஉரையாற்றினார். பழைய பென்ஷன் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் அன்பழகன், தங்கவேல் முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.