சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-04 19:20 GMT

காரியாபட்டி,

நரிக்குடி ஒன்றியத்தில் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி உணவு தயாரிக்கும் பணியை சத்துணவு பணியாளர்களிடம் வழங்குதல், விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நரிக்குடி யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் நரிக்குடி ஒன்றிய கிளை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். நரிக்குடி ஒன்றிய சங்க செயலாளர் ஜெயலட்சுமி கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். மாவட்ட இணை செயலாளர் வசுமதி புஷ்பராணி சிறப்புரை நிகழ்த்தினார். முடிவில் சத்துணவு ஊழியர்கள் சங்க பொருளாளர் இந்திராணி நன்றியுரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், பொறுப்பாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்