சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-03 18:30 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சித்ரா உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் உடனே நிரப்பிட வேண்டும். சத்துணவு மையங்களில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் நடைமுறையை தனியாருக்கு கொடுக்காமல் சத்துணவு ஊழியர்கள் மூலமே காலை சிற்றுண்டி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்