சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பகண்டை கூட்டுரோட்டில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-10 17:07 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பகண்டை கூட்டுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏசுமணி தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் பள்ளிக்கு வெளியில் இருந்து சுய உதவிக்குழு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக உணவு தயாரித்து வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளிலேயே போதிய அளவுக்கு சமையல் அறை வசதி உள்ளதால் காலை சிற்றுண்டியை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்க தங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்