விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பரிமளம், மாநில துணை தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்புக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், .யூரியா உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை அரசு தடுக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.