கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-30 18:53 GMT

கரூர் மாவட்ட கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கல்வித்துறை அமைச்சு பணியாளர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியத்தினை வழங்க காலம் தாழ்த்தும் பள்ளிக்கல்வித்துறை ஆணையரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்