திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-14 18:45 GMT

நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை முன்பு திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிடர் கழக இளைஞர் அணி மாவட்ட தலைவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அரசுடமையாக்கப்பட்ட வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு இளைஞர்களுக்கு வங்கி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், திராவிட கழக மாணவரணி மாவட்ட தலைவர் சூர்யா, மாவட்ட காப்பாளர் காசி, நிர்வாகிகள் செல்வசுந்தரசேகர், ரமேஷ், ரத்தினசாமி, வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்