திராவிட விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடைக்கானலில் திராவிட விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-30 16:45 GMT

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிட விடுதலை கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்தும், கைகளில் கொடிகளை ஏந்தியும் கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள உகார்த்தே நகர் நுழைவு வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்