திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திராவிட கழக தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர் ராஜு, மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் உயர் சாதி நீதிபதிகள் ஆதிக்கமா?, இதனால் தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக திராவிட கழகத்தினர் தெரிவித்தனர்.