தென்காசியில் தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
தென்காசியில் தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை அறிக்கை வெளியிட்டுள்ளார்
கடையநல்லூர்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் திரளாக பங்கேற்றிட கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.