மறைமலைநகர், குன்றத்தூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மறைமலைநகர், குன்றத்தூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-30 08:08 GMT

மறைமலைநகர், 

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டுகொள்ளாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட, ஒன்றிய, நகர மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னதாக செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதினி கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தமிழ்செல்வி விஜயராஜ், கஜலட்சுமி சண்முகம், வனிதா ஸ்ரீனிவாசன், செல்வ சுந்தரி ராஜேந்திரன் உள்பட ஏராளமான மகளிர் அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடிவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், நகர மகளிர் அணி அமைப்பாளர் இந்திரா ஆகியோர் நன்றி கூறினர்.

ஸ்ரீபெரும்புதூர்

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த பாலியல் வன் கொடுமையை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்தும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மகளிர் அணி சார்பில் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மலர்வழி தமிழ் அமுதன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன உரையை நிகழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்