மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-11 18:27 GMT

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவித்தொகை ரூ.3 ஆயிரம்

பார்வை மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மூன்று சென்ட் இடம் வழங்க வேண்டும். பார்வையற்ற படித்த பட்டதாரிகளை அரசு பணியில் நியமிக்க வேண்டும். ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். போட்டி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எளிய முறையில் வங்கி கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். பார்வையற்றோர் நல சங்கத்தின் தலைவர் காளிதாஸ், செயலாளர் ரகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கலா, ராஜலெட்சுமி மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்