ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-06 20:50 GMT


தமிழக அரசின் பெண்கள் நலத்திட்டத்தையும், இலவச பஸ்சில் பயணித்த பெண் பயணிகளையும் இழிவுபடுத்திய டிரைவர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களையும் தமிழக அரசின் திட்டத்தையும் இழிவாக பேசியதை தட்டிக்கேட்ட மாதர் சங்க மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், இந்திரா மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும். வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கம் மதுரை மாநகர் - புறநகர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு புறநகர் மாவட்டச் செயலாளர் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் ஜென்னியம்மாள் முன்னிலை வகித்தார்,

மாநில துணைத் தலைவர் மல்லிகா, மகளிர் சட்ட உதவி மன்றம் தலைவர் வக்கீல் நிர்மலாராணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் 

Tags:    

மேலும் செய்திகள்