பெத்தநாயக்கன்பாளையம்:-
தக்காளி விலை உயர்வை கண்டித்தும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. வட்ட செயலாளர் பெருமா தலைமை தாங்கினார். ம.துளசி, கா.செல்வி, க.அஞ்சலம், ரா.சோபனா, சி.இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டசெயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசவுந்தரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் பங்கேற்ற பெண்கள் பெத்தநாயக்கன்பாளையத்தில் சாக்கடை, குடிநீர், சுகாதாரம் சாலை செப்பனிடுதல் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும், அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும், தக்காளி விலையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மகளிர் உரிமைத்தொகையை அனைத்து பெண்களுக்கும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.